சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் குறித்த புகைப்பட கண்காட்சியை மநீம தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு எங்கள் முதல்வன் எங்கள் பெருமை என்ற தலைப்பில் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.
