தனது கோரிக்கையை ஏற்ற தேர்தல் ஆணையத்திற்கு மனமார்ந்த நன்றி: சீமான் ட்வீட்

சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறு விறுப்புடன் நடந்து வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் 238 வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் நீண்டவரிசையில் நின்று ஓட்டுப்போட்டு வருகின்றனர். பதற்றமான பகுதிகளில் துணை ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். 6 மணிக்குள் வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். 6 மணிக்கு பின்னர் வரும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதி இல்லை.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் போது வைத்த கோரிக்கையை நிறைவேற்றிய தேர்தல் ஆணையத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; வாக்குப் பதிவின்போது, வாக்கு எந்திரத்தைச் சுற்றி முழு மறைப்பு வைக்க வேண்டுமென்று தேர்தல் பரப்புரையின்போது நான் வைத்த கோரிக்கையை ஏற்று, ஈரோடு கிழக்கிலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எந்திரத்தைச் சுற்றி முழுமறைப்பினை வைத்துள்ள தேர்தல் ஆணையத்திற்கு மனமார்ந்த பாராட்டும், நன்றியும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: