ஈபிஎஸ்-க்கு வந்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!: அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை அங்கீகரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு..!!

டெல்லி: அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை அங்கீகரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேநேரத்தில் அதிமுக விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் ஒரு மனுதாக்கல் செய்தனர்.

அதில், அதிமுக விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இருப்பதால் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்க கூடாது என குறிப்பிட்டுள்ளனர். அதேபோல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட உட்கட்சி தேர்தல் முடிவுகள் மற்றும் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் செயற்குழு மூலம் திருத்தப்பட்ட கட்சி விதிகளையும் அங்கீகரிக்கக்கூடாது என முறையிட்டுள்ளனர். சிவில் வழக்குகள் முடியும் வரை இரட்டை இலை சின்னம் கோரும் எந்த மனுவையும் ஏற்க கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: