சென்னை: ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவை சென்னையில் இருந்தவாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆய்வு செய்கிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த தொகுதி மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மிகவும் எதிர்பார்ப்போடு உள்ள ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆய்வு செய்தார்.
