ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஆர்.கே.நகர் தொகுதியில் இபிஎஸ் உரையாற்றுகிறார்: தமிழ்நாடு முழுவதும் பேசுபவர்கள் பட்டியல் வெளியீடு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டமாக மார்ச் 5ம் தேதி ஆர்.கே.நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார். இதுகுறித்து அதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் மார்ச் 5ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார். அதே தினத்தில், சோழிங்கநல்லூரில் கே.பி.முனுசாமி, திண்டுக்கலில் திண்டுக்கல் சீனிவாசன், வேளச்சேரியில் தம்பிதுரை, கோபிசெட்டி பாளையத்தில் செங்கோட்டையன் ஆகியோர் பேசுகின்றனர்.

மேலும், குமாரபாளையத்தில் தங்கமணி, தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணி, மதுரை மேற்கில் செல்லூர் ராஜூ, பாலக்கோட்டில் கே.பி.அன்பழகன், வேதாரண்யத்தில் ஓ.எஸ்.மணியன், விராலிமலையில் சி.விஜயபாஸ்கர், திருமங்கலத்தில் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

அதேபோல, மார்ச் 6ம் தேதி அதிமுகவில் உள்ள சினிமா நட்சத்திர பேச்சாளர்களான நடிகர் சிங்கமுத்து எடப்பாடி தொகுதியிலும், நடிகர் வையாபுரி கவுண்டம் பாளையம் தொகுதியிலும் பேசுகிறார்கள். மேலும், எழும்பூர் தொகுதியில் பாலகங்கா மற்றும் குண்டு கல்யாணம், கோயில்பட்டியில் வைகைச்செல்வன், பல்லாவரத்தில் இன்பதுரை, பூந்தமல்லி பொதுக்கூட்டத்தில் நடிகை பசி சத்யா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதேபோல, மார்ச் 7ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டங்களில் நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன், ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார், கன்னியாகுமரி தொகுதியில் தளவாய் சுந்தரம், ஆவடி தொகுதியில் முன்னாள் எம்.பி. வேணுகோபால் கலந்துகொள்கின்றனர். மேலும், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், கொளத்தூர் தொகுதியில் நடிகர் லியாகத் அலிகான், விருகம்பாக்கம் தொகுதியில் நடிகர் குண்டு கல்யாணம், சோளிங்கர் தொகுதியில் நடிகை டி.கே.கலா ஆகியோர் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

Related Stories: