அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை: சென்னையில் எஸ்.டி.பி.ஐ. தலைவர்கள் பேட்டி

சென்னை: அதானி குழும விவகாரத்தில், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். எஸ்.டி.பி.ஐ.கட்சி தேசிய, மாநில, மண்டல மற்றும் மாவட்ட தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார்.

மாநில பொது செயலாளர்கள் அகமது நவவி, அச.உமர் பாரூக், பொருளாளர்  அமீர் ஹம்சா, செயலாளர் ஏ.கே.கரீம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஷஃபீக்  அகமது, பஷீர் சுல்தான், முகமது ரசீத், பயாஸ் அகமது, மண்டல செயலாளர்கள்  இஸ்மாயில், ஹமீத் ஃப்ரோஜ், வர்த்தகர் அணி மாநில தலைவர் கிண்டி அன்சாரி,  எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்க மாநில தலைவர் முகமது ஆசாத் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். இதில் தேசிய தலைவர் எம்.கே.பைஸி, தேசிய செயலாளர் அப்துல் சத்தார், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் முகைதீன், பாரூக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதில் சென்னை, வேலூர், விழுப்புரம் மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டமிடல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

தொடர்ந்து தேசிய தலைவர் எம்.கே.பைஸி, மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி:

அதானி குழும ஊழல் முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணை,. பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கவுதம் அதானியின் பாஸ்போர்ட்டை உடனடியாக பறிமுதல் செய்து அவர் வெளிநாடு செல்லவில்லை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதானியின் அனைத்து வணிகக் கணக்குகளையும், நிதி பரிவர்த்தனைகளையும் கண்காணித்து, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: