காவல்துறை சார்பில் 145 குடிசை மாற்று வாரிய பகுதிகளில் பாதுகாப்பு, போக்சோ சட்டம் மற்றும் போதை எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்: 2,896 பொதுமக்கள் பங்கேற்றனர்

சென்னை: சென்னை  காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், துணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், உதவி ஆணையாளர்கள் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று முன் தினம் சென்னையிலுள்ள குடிசை பகுதிகளுக்கு நேரில் சென்று அங்கு வசிக்கும் மக்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்தசிறப்பு முகாமில், சென்னை காவல் குழுவினர், 179 தன்னார்வலர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்கள் ஒருங்கிணைப்புடன் சென்னையிலுள்ள 145 குடிசை மற்றும் குடிசைமாற்று வாரிய பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பு, போக்சோ சட்டம் மற்றும் போதை எதிர்ப்பு  குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தினர்.

முகாம்களில், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக அமல்படுத்தப்பட்ட பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்தும், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை பொருள் நடமாட்டத்தை அறவே ஒழிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது. நேற்றைய விழிப்புணர்வு முகாம்களில் மொத்தம் 2,896 பொதுமக்கள் கலந்து கொண்டு காவல்துறையின் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டு பயனடைந்தனர்.

Related Stories: