இந்தியாவில் முதல் முறையாக ஆர்பிட்டல் அதிரெக்டோமி சிகிச்சை அறிமுகம்: டாக்டர் செங்கோட்டுவேலு தலைமையிலான குழு சாதனை

சென்னை: இந்தியாவில் முதல் முறையாக ஆர்பிட்டல் அதிரெக்டோமி அறிமுகப்படுத்தப்பட்டு, இரண்டு பயனாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை, அப்போலோ மருத்துவமனையின் மூத்த தலைமை இதய நோய் நிபுணர் டாக்டர். செங்கோட்டுவேலு மற்றும் அவரது குழுவினர் இணைந்து இதய தமனிகளில் அதிகளவு கால்சியம் படிந்த நோயாளிகளுக்கு ஆர்பிட்டல் அதிரெக்டோமியை பயன்படுத்தி இரண்டு பயனாளிகளுக்கு சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில், ஆர்பிட்டல் அதிரெக்டோமி சிகிச்சை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இதில் பயன் பெற்றவர்களில் ஒரு நோயாளி முதியவர், 15 ஆண்டுகள் முன்பாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர். அவருக்கு மார்பு வலி மற்றும் கடுமையான கால்சியம் படிந்த தமனியைக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மீண்டும் ஒரு பைபாஸ் அறுவை சிகிச்சை அளிப்பதற்கு நோயாளியின் நிலைமை பொருத்தமற்றதாக இருந்தது. இதன் காரணமாக மெதுவான மற்றும் அதிக வேகத்தில் டயமண்ட் பேக் ஆர்பிட்டல் அதிரெக்டோமி சாதனத்தைப் பயன்படுத்தி கால்சியத்தை வெற்றிகரமாக டாக்டர் குழு அகற்றினார்கள்.

மேலும்,ஆர்பிட்டல் அதிரெக்டோமி என்பது ஸ்டென்ட் பொருத்துவதற்கு முன் கால்சிஃபைட் பிளாக்குகளை (அடைப்பு ) திறக்கப் பயன்படும் ஒரு புதுமையான சிகிச்சையாகும். இதன்மூலம், கால்சியத்தை தோராயமாக 2 மைக்ரான் அளவுள்ள மணல் போல் நுண்ணிய துகள்களாக மாற்றுகிறது. அதேபோல, கால்சியத்தில் மைக்ரோ முறிவுகளை முன்னோக்கி உருவாக்குகிறது. இந்த கருவி ஒரு வட்ட இயக்கத்தில் சுழலும், முன்னோக்கி மற்றும் பின்னோக்கி இயக்கமாக செயல்படுகிறது. மேலும், இந்த கருவி மூலம் குறைந்த மற்றும் அதிக வேகத்தில் இயக்கப்பட்டு நோயாளியின் உடற்கூறியல் அடிப்படையில் இவை தீர்மானிக்கப்படுகிறது. இது, கால்சிஃபைடு பிளாக்குகளுக்கு சிகிச்சையளிப்பதை எளிமையாக்குகிறது. பல புதுமையான துல்லியமான ஸ்டென்டிங் நுட்பங்களை கொண்டு மிக சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக டாக்டர்.செங்கோட்டு வேலு தலைமையிலான மருத்துவக்குழு செய்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: