வாக்காளர்களுக்கு பரிசு மழைதான்: செல்லூர் ராஜூ மகிழ்ச்சி

ஈரோடு  கிழக்குதொகுதிக்குட்பட்ட மரப்பாலம் பகுதியில் நேற்று  அதிமுக வேட்பாளரை  ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர்  ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக வேட்பாளர் அறிமுக  கூட்டத்தில் கலந்து  கொண்ட பாஜவை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கவர்னர்  பதவி  கிடைத்துள்ளது. தற்போது அதிமுக எடப்பாடி வசம் என்று தீர்ப்பு  வந்துள்ளது. இப்படி எங்களுக்கு  வெற்றி மீது வெற்றி வந்து குவிந்து  கொண்டுள்ளது. அதேபோல தொகுதி  மக்களுக்கும் வாட்ச், குக்கர், வெள்ளி டம்ளர்  என பரிசு பொருட்கள்  கொட்டுவதாக கூறுகின்றனர். இரவு நேரத்தில் வந்து பரிசு  பொருட்கள் கொடுக்க  கதவை தட்டுவதாக வாக்காளர்கள் கூறியுள்ளனர்.  தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள்  மட்டுமே உள்ளதால் வாக்காளர்களுக்கு ஒரே  பரிசு மழைதான். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: