திருவள்ளூர்: பூண்டி ஏரியில் மயங்கிவிழுந்து மீனவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கண்ணாளன் மகன் ஆனந்தன் ( 48). மீனவர். இந்நிலையில் இவர் நேற்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக பூண்டி ஏரிக்கு படகில் சென்றுள்ளார். பின்னர் மீன் பிடித்துக்கொண்டு பிற்பகல் படகில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆனந்தன் திடீரென மயங்கி படகில் இருந்து தண்ணீருக்குள் விழுந்துள்ளார். தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீசார், திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.