காஞ்சிஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் கணிதவியல் துறை கருத்தரங்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதவியல் துறை சார்பில், ‘சமூக இணைப்பில் நுண்கணிதம்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடைபெற்றது. காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் பா.போஸ் தலைமை தாங்கினார். தாளாளர் அரங்கநாதன், தலைவர் சாய்ராம், செயலாளர் மாதவன், பொருளாளர் பிரதீப்குமார் மற்றும் இயக்குனர்கள் முன்னிலை வகித்தனர். கணிதவியல் துறைத்தலைவர் அகிலா வரவேற்று பேசினார்.

கல்லூரியின் முதல்வர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்துவைத்தார். இந்த கருத்தரங்கில், சிறப்பு விருந்தினராக வேலூர் விஐடி பல்கலைக்கழக கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர் கலைவாணி பங்கேற்றார். இதில், கல்லூரி துணை முதல்வர் பிரகாஷ், உதவிப் பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில், கணிதவியல் உதவிப்பேராசிரியர் சண்முகம் நன்றி கூறினார்.

Related Stories: