மாதவரம் தபால்பெட்டி சாலையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

திருவொற்றியூர்: மாதவரம் காவல் நிலையம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து போதைப்பொருள் தடுப்பு மற்றும் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி, சென்னை வடக்கு காவல் இணை ஆணையர் மனோகரன், அண்ணாநகர் காவல் துணை ஆணையர் ரோகித்நாதன் ஆலோசனையின்படி, மாதவரம் தபால்பெட்டி சாலையில் நேற்று நடந்தது. பேரணியை புழல் சரக காவல் உதவி ஆணையர் ஆதிமூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமை வகித்தார். குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார்.

பேரணியில், காவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர், மாதவரம் தபால் பெட்டி சந்திப்பிலிருந்து  ஊர்வலமாக புறப்பட்டு மூலக்கடை சந்திப்பு வரை சென்றனர். அதேபோல், மாதவரம் பால் பண்ணை சட்டம் -ஒழுங்கு ஆய்வாளர் சங்கர் தலைமையில், மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் நடந்த போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் கவுன்சிலர் காசிநாதன், காவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

Related Stories: