செய்யூர்: சித்தாமூர் அருகே நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளை நேற்று வருவாய் துறையினர் அதிரடியாக அகற்றினர். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்துள்ள சரவம்பாக்கம் ஊராட்சி கூட்ரோடு பகுதியையொட்டி குளம் உள்ளது. இந்த குளக்கரை பகுதியை ஆக்கிரமித்து 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் கடைகள் கட்டி 50 ஆண்டு காலத்திற்கு மேலாக வாழ்ந்து வந்தனர்.
