சேலம் பெரியார் பல்கலை முறைகேடு விசாரணை வளையத்தில் சிக்கிய பேராசிரியருக்கு புதிய பொறுப்பு: ஒன்றிய அரசு வழங்கியதால் சர்ச்சை

சேலம்: முறைகேடு புகார் தொடர்பான விசாரணை வளையத்தில் சிக்கிய பெரியார் பல்கலைக்கழக பேராசிரியருக்கு, சாகித்ய அகாடமி பிரதிநிதித்துவ குழுவில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒன்றிய அரசின் கலாச்சார துறையின் கீழ் செயல்பட்டு வரும் சாகித்ய அகாடமி சார்பில், இலக்கிய துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பொதுக்குழுவில் தலைசிறந்த எழுத்தாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், நீதிபதிகள், விருது பெற்றவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இடம்பெற்றிருப்பார்கள்.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளாக, இக்குழுவில் இடம்பெறும் 20 உறுப்பினர்கள் கொண்ட பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் தமிழ்நாடு சார்பில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் பெரியசாமியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. பல்வேறு முறைகேடு புகாரில் சிக்கியுள்ள பெரியசாமி, தமிழக அரசின் விசாரணை குழு வளையத்திலும் உள்ளார். இந்தநிலையில், இவரது பெயர், சாகித்ய அகாடமி பிரதிநிதித்துவ குழுவில் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: