சித்தூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தெலுங்கு தேசம் கட்சி எம்எல்சிக்கு போலீஸ் பாதுகாப்பு

சித்தூர் : சித்தூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தெலுங்கு தேசம் கட்சி எம்எல்சிக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர். சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் எம்எல்சி பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர், தெலுங்கு தேசம் கட்சியினர், ஆம் ஆத்மி கட்சியினர், ஜனசேனா கட்சியினர், பாஜனதா கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் என ஏராளமானோர் வந்தனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் பஞ்சாயத்து தலைவர்கள், ஜில்லா பரிஷத் தலைவர்கள், மண்டல பரிஷத் தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் வாக்களிக்கும் எம்எல்சி பதவிக்கு திருப்பதியை சேர்ந்த சுப்பிரமணியம், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தனஞ்செயலு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. மதியம் 2:30 மணியளவில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த தனஞ்செயலு வேட்பு மனு தாக்கல் செய்தார். 2.30 மணி வரை யாரும் சிப்பாய் சுப்பிரமணியத்திற்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை.

இதனால், அவர் போட்டியின்றி எம்எல்சி பதிவியை அடைவார் என ஆளும் கட்சியினர் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தனஞ்செயலு மதியம் 2.30 மணிளவில் எம்எல்சி துரைபாபு மற்றும் ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், தனஞ்செயலுவை கடத்தப்பபோவதாக வதந்திகள் வந்தது. இதையடுத்து, அக்கட்சியினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்பேரில் 2வது நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மதையாச்சாரி, எஸ்ஐ ராமகிருஷ்ணா மற்றும் போலீசார் தனஞ்செயலுவை போலீஸ் பாதுகாப்புடன் அவரது விட்டில் விட்டனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தனஞ்செயலு வேப்பு மனு தாக்கல் செய்யும் வரை ஆளும் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்திலேயே திருப்பதி எம்பி குருமூர்த்தி, ஸ்ரீகாளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன் உள்பட பலர் அங்கேயே காத்திருந்தனர்.

Related Stories: