ஓசூர் தொழிற்சாலை சரணாலயத்தில் 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கணக்கெடுப்பு

ஓசூர் : ஓசூரில் உள்ள தொழிற்சாலை சரணாலயத்தில், 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டி.வி.எஸ் மோட்டார் தொழிற்சாலையில், 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் காடு, ஆயிரக்கணக்கான மரங்கள், பறவைகள் சரணாலயம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, தாவரவியல் பூங்கா, ஆர்கானிக் கம்போஸ்ட் மையம் மற்றும் 18 குளங்கள் என இயற்கையின் மிகப்பிரமாதமான அம்சங்கள் நிறைந்த பசுமை படர்ந்த பல்லுயிர்களின் இல்லமாக இருந்து வருகிறது.

இந்த சரணாலயம், கடந்த 22 ஆண்டுகளாக அதன் சுற்றுப்பகுதியில் பெயின்டட் ஸ்டார்க் என்றழைக்கப்படும் மஞ்சள் மூக்கு நாரைகளின் மிகப்பெரிய இனப்பெருக்க பிரதேசங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இங்கு இந்த மஞ்சள் மூக்கு நாரைகள் கூடுகளைக் கட்டி, தங்களது குஞ்சுகளை வைத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் வளர்ந்த பின்னர், அவற்றை பல்வேறு பிரதேசங்களில் இருக்கும் தங்களது வசிப்பிடங்களுக்கு அழைத்துச் செல்கின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு வனத்துறை சார்பில், ஓசூர் வனப்பிரிவு சமீபத்தில் பறவைகள் கணக்கெடுப்பை மேற்கொண்டது. இந்த கணக்கெடுப்பின் போது, கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உதவியுடன், 15 நீர்நிலைகளில் 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. இந்த பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், மஞ்சள் மூக்கு நாரைகள் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஈரநிலப்பகுதிகளில் மட்டுமே கூடு கட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த சரணாலயத்தில் பள்ளி மாணவர்கள் வந்து பார்வையிடும் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Stories: