வாஷிங்டன் : உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோபிடன் பரிந்துரைத்துள்ளார். வாஷிங்டனில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் உலக வங்கியின் தலைவராக இருந்த டேவிட் மல்பாஸ் சமீபத்தில் பதவியில் இருந்து விலக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் உலக வங்கிக்கான புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.இந்த நிலையில் உலக அளவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சேவை அளிக்கும் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் இந்திய - அமெரிக்கருமான அஜய் பங்காவை உலக வங்கியை வழிநடத்த அமெரிக்க அரசு பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் அறிவித்துள்ளார்.
