ஜகார்த்தா : இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்மடைந்தனர். சிரியா, துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் சுமார் 47,000 பேர் உயிரிழந்தனர்.பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். துருக்கியைத் தொடர்ந்து, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ரோமானியா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் சங்கிலி தொடர் போல நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்தியாவிலும் சிக்கிம், அசாம்,உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் லேசான நிலநடுக்கங்கள் பதிவாகின.இதனிடையே ஜிகிஸ்தான் நாட்டில் முர்கோப் எனும் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது.
