உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆக பதிவு!!

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆக பதிவாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இருந்து கிழக்கு திசையில்143 கி.மீ. தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வுக்கான தேசியமையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர் தெரிவித்திருந்தார். இந்தியாவின் டெக்டானிக் பிளேட் ஆண்டுதோறும் 5 செ.மீ. நகர்வதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி என்.பூர்ணசந்திர ராவ் கணித்தார்.

ஆண்டுக்கு 5 செ.மீ. வீதம் இந்திய கண்டத்தட்டு நகர்வதால் தட்டுகள் இணையும் பகுதியில் அழுத்தம் அதிகரித்து வருகிறது எனவும் கண்டத்தட்டுகள் இணையும் பகுதி இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் அங்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.

மேலும் இமயமலையில் அமைந்துள்ள உத்தராகண்ட்டில் நிலநடுக்கம் வர வாய்ப்பு அதிகம் எனவும் உத்தராகண்ட்டில் மட்டுமே பூமி அதிர்வை அளவிடும் 18 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் பூர்ணசந்திர ராவ் தகவல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இருந்து கிழக்கு திசையில்143 கி.மீ. தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வுக்கான தேசியமையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆக பதிவாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக டெல்லி புறநகர் பகுதி, ஹரியானா, உத்திரபிரதேசம் மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாகவும், பெரும் உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: