சென்னை அண்ணாசாலை நிலஅதிர்வு: மெட்ரோ பணிகளால் நில அதிர்வு உணரப்பட்டிருக்க கூடும் என்ற தகவலுக்கு மெட்ரோ நிர்வாகம் மறுப்பு

சென்னை: மெட்ரோ பணிகளால் நில அதிர்வு உணரப்பட்டிருக்க கூடும் என்ற தகவலுக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது.

சென்னை அண்ணாசாலை லாயிட்ஸ் ரோடு பகுதியில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியது. நிலஅதிர்வு உணரப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் விரைந்து ஆய்வு மேற்கொண்டனர்.  

நிலஅதிர்வு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளக்கூடிய துறையை சேர்ந்த அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.  மேலும் 3 மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து ஊழியர்கள், பணியாளர்கள் வெளியேறி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மெட்ரோ பணிகளால் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டதா என்ற ஐயத்தின் அடிப்படையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் மெட்ரோ ரயில் பணியினால் கட்டடத்தில் அதிர்வு ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்பட்டதிற்கு மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: