டெல்லி: இந்திய டெக்டானிக் பிளேட் ஆண்டுதோறும் 5 செ.மீ. நகர்வதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி என்.பூர்ணசந்திர ராவ் கணித்துள்ளார். கடந்த சில நாட்களாக உலகின் பல்வேறு நாடுகளில் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. பிப்ரவரி 6ம் தேதி துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 46,000 மக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, ஜப்பான் என பல நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனிடையே இந்தியாவிலும் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், சிக்கிம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கங்கள் அண்மையில் ஏற்பட்டன.
