பட்டினப்பாக்கம் பகுதிகளில் உள்ள மீன் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் சாலை மறியல்

சென்னை: சென்னை மெரினா பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் பகுதிகளில் உள்ள மீன் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சாலையோரம் கடை வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.

பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் லூப் சாலையை விரிவுபடுத்துவடுத்துவதாக கூறி மற்றும் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் சாலையில் வியாபாரம் செய்யக்கூடாது எனக்கூறியும் மாநகராட்சி அதிகாரிகள் அங்குள்ள கடைகளை அப்புறப்படுத்தியபோது மீனவர்களுக்கும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் மயிலாப்பூர் காவல்துணை ஆணையர் ரஜத் சதுர்வேதி தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Related Stories: