ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரி கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க  உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், வெளிமாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும். அதுவரை தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்  என்று கோரியிருந்தார். இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத் சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.

Related Stories: