ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சி பொருளாளர் பிரேமலதா நேற்று மாலை 6.35 மணிக்கு குமலான்குட்டை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இரண்டு முறை வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த தென்னரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதனால் அவர் செல்லும் இடமெல்லாம் எதிர்பு தெரிவிக்கின்றனர். அதுக்கு மேல் பேசுவதற்கு அங்கு எதுவும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தின்போது வாக்குப்பதிவு நடக்கும் 29ம் தேதியன்று நீங்கள் தேமுதிகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரேமலதா தெரிவித்தார்.
