சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், பெண்களின் பாதுகாப்பு கருதி நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 60.84 கோடி மதிப்பில் தெருவிளக்கு மின்கம்பங்கள் மற்றும் எல்.இடி மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு கருதி நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்ட மண்டலங்களான 1, 2, 3, 7, 11, 12, 14 மற்றும் 15 ஆகிய வளர்ச்சியடைந்த பகுதிகள், காவல்துறையினரால் கண்டறியப்பட்ட பகுதிகள், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மையப்பகுதிகளில் புதியதாக தெருவிளக்கு மின்கம்பங்கள் அமைத்தல் மற்றும் அதில் எல்.இடி மின் விளக்குகள் அமைத்தல் பணிகளும் பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் உள்ள துருப்பிடித்த மற்றும் பழுதான தெரு விளக்கு மின்கம்பங்கள் மாற்றி அமைத்தல் ஆகியவற்றினை மேற்கொள்ளவும் 2022 - 2023 ஆம் நடப்பு நிதியாண்டில் மொத்தம் ரூபாய் 60.84 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
