தமிழ்நாட்டில் கஞ்சா, போதைப்பொருள் நடமாட்டம் குறைந்துள்ளது: ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா, போதைப்பொருள் நடமாட்டம் கண்டிப்பாக குறைந்துள்ளது என ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா தெரிவித்துள்ளார். வைகை விரைவு ரயிலில் கடந்த 9ம் தேதி வடமாநில தொழிலாளி தாக்கப்பட்டார். ரயிலில் நடந்த தாக்குதல் தொடர்பாக ரயில்வே ஏடிஜிபி வனிதா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; ஓடும் ரயிலில் வடமாநில தொழிலாளியை தாங்கிய விழுப்புரத்தைச் சேந்த மகிமை தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் வீடியோ காட்சி அடிப்படையில் விசாரணை நடத்தி குற்றவாளி கைது செய்யப்பட்டார். ஓடும் ரயிலில் வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய மகிமைதாஸ் என்பவர் மீது IPC 153a பிரிவு (இரு பிரிவினரிடையே மோதலை தூண்டும் வகையில் செயல்படுதல்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மகிமை தாஸ் கோயம்பேடு சந்தையில் கூலித்தொழிலாளியாக பணிபுரிபவர். ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

பொது இடங்களில் தனிப்பட்ட, மொழிவாரியான, அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்லக் கூடாது. சம்பந்தப்பட்ட வீடியோவை ஷேர் செய்தவர்களுக்கு சம்மன் கொடுத்து விசாரணை நடத்தினோம். ரயில்களில் கஞ்சா கடத்தல் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா, போதைப்பொருள் நடமாட்டம் கண்டிப்பாக குறைந்துள்ளது இவ்வாறு கூறினார்.

Related Stories: