தமிழகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம்.. அன்னை மொழிக்கு மரியாதை செய்வோம்: ராமதாஸ் ட்வீட்

சென்னை: தமிழகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம். அன்னை மொழிக்கு மரியாதை செய்வோம் ராமதாஸ் தெரிவித்துள்ளார். உலகின் மூத்த மொழிகளில் ஒன்று செம்மொழியான தமிழ் மொழி. இது போன்ற பழமைமிக்க மொழிகள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் மொழிகளுக்காக ஆண்டுதோறும் சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் நாள் சர்வதேச தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. பன்மொழி கலாச்சாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும் தாய்மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; வங்கமொழியின் உரிமையைக் காப்பதற்கான போராட்டத்தில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இன்னுயிரை ஈந்த டாக்கா பல்கலை. மாணவர்களின் நினைவாக உலகத்தாய்மொழி நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தாய்மொழி உயிரினும் மேலானது என்பதே இந்த நாள் சொல்லும் செய்தி ஆகும். தமிழ்நாட்டில் தமிழ் அரியணை ஏற்றப்பட வேண்டும் என்பது தான் நமது இலக்கு.

அதற்காக எந்த ஈகத்தையும்  செய்யத் தயாராகவே இருக்கிறோம். அன்னைத் தமிழைக் காக்க ‘ தமிழைத் தேடி...’ பயணத்தை இன்று தொடங்கிறேன். தமிழகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம். அன்னை மொழிக்கு மரியாதை செய்வோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: