வன கிளிகளை வளர்த்த நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்: வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: வன கிளிகளை வளர்த்த நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். நடிகர் ரோபோ சங்கர் சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் வளர்க்கும் வனகிளிகள் குறித்த தகவல் யூடியூப்பில் வெளியானது.  இதுகுறித்து கிண்டி வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்ததையடுத்து,  வனத்துறை அதிகாரிகள் கடந்த 15ம் தேதி நடிகர் ரோபோ சங்கர் வீட்டில், அனுமதியின்றி வளர்த்து வந்த 2 அலெக்சாண்டிரியன் கிளிகளை பறிமுதல் செய்து  உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.

இந்த 2 அலெக்சாண்டரியன் பச்சை கிளிகளை வளர்த்தது தொடர்பாக நடிகர் ரோபோ சங்கர், அவரது மனைவி ஆகியோர் வனத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனையடுத்து நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்து, அந்த தொகையை அரசு கருவூலத்தில் செலுத்தி ரசீது நகலை தங்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தனர். மேலும் வீட்டில் வன கிளிகள் வளர்ப்பது தவறு என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிடும்படியும் வனத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Related Stories: