8 ஆண்டுகளாக மனு அளித்தும் பட்டா கிடைக்காததால் விரக்தியில் பிளேடால் கையை அறுத்து கொண்ட தொழிலாளி: காஞ்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வரும் இடத்திற்கு பட்டா கேட்டு மனு அளித்தும், கிடைக்காத விரக்தியில் கூலி தொழிலாளி பிளேடால் கையை அறுத்து கொண்டார். இச்சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வெள்ளாரை பகுதியை சேர்ந்த நீலகண்டன் (46). கூலி தொழிலாளியான இவர், வசிக்கும் பகுதியில் 50 சென்ட் இடத்திற்கு பட்டா வழங்கக்கோரி கடந்த 2016ம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்களிடம் தொடர்ந்து மனு அளித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை, மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வரும்நிலையில் நீலகண்டன் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் வசிக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க கோரி மனு அளித்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிக்கூரிய நிலையில் நீலகண்டன் நீதி வேண்டும் நீதி வேண்டும் என்று கோஷமிட்டார்.

பின்னர், பாக்கெட்டில் வைத்திருந்த பேரால் இடது கையை சரமாரியாக அறுத்துக் கொண்டு பட்டா வழங்க கோரி அதிகாரியிடம் முறையிட்டார். உடனடியாக காவல் துறை கொண்டு நீலகண்டனை வெளியே அனுப்பி வைத்து காவல் துறையினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். நேற்று மனு நாளில் அதிகளவில் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வந்து கொண்டிருந்தபோது திடீரென கத்தியால் கையை அறுத்து கொண்டதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்படுத்தியது.

Related Stories: