நான் நிறைய சிந்திப்பேன்: இது என் சொந்த ஸ்கிரிப்ட் தம்பி; செல்லூர் ராஜூ லகலக

ஈரோடு மரப்பாலம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு வீட்டின் முன்பாக அமர்ந்து திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது  கரும்பலகையில் இன்றைய விலைவாசி உயர்வு குறித்து எழுதி மக்களுக்கு இதனால்  கூடுதலாக எவ்வளவு செலவாகிறது என்பது குறித்து பள்ளி ஆசிரியர் பாடம் நடத்துவது போல குச்சி ஒன்றை வைத்துக்கொண்டு விளக்கி கொண்டிருந்தார். அப்போது இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘தம்பி நானே தயாரித்த என் சொந்த ஸ்கிரிப்ட். நான் நிறைய சிந்திப்பேன். இது போல நிறைய வைத்துள்ளேன். ஒவ்வொன்றாக வெளியே எடுப்பேன்’ என்றார்.

Related Stories: