திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் நெல் ஓவியத்தில் சிவனை வடிவமைத்த சிற்ப கலைஞர்கள்: பக்தர்கள் மகிழ்ச்சி

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மகா சிவராத்திரி தினமான நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். சிவராத்திரி முன்னிட்டு கோவிலின் உள் பிரகாரத்தில் சுப்பிரமணிய சுவாமி சன்னதி எதிரில் திருவதிகை சிற்ப கலைஞர்கள் சார்பில், நெல் மணியால் பிரமாண்டமான அழகிய சிவன் அன்னபூரணி நெல் சிற்பம் அமைத்து அசத்தினர். 100 கிலோ அரிசி, நெல்  ஆகியவற்றால் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ள சிவன்-அன்னபூரணி ஓவியம் காண்போரின் கண்களை கவர்ந்துள்ளது. கோயிலுக்குள் வரும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்பி எடுத்து செல்கின்றனர்.

Related Stories: