தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், தர்மபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரிப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.!

சென்னை: தமிழகத்தில் அதிகாலையில் பனி மூட்டம் நீடித்து வரும் நிலையில், 13 மாவட்டங்களில் காலை நேர வெப்பநிலை இயல்பை விட அதிகரித்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 தமிழகத்தில்  அதிகாலையில் பனி மூட்டமும், அதன் பின்பு வறண்ட வானிலையும் காணப்படுகிறது. மார்ச் மாதம் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பனி மூட்டம் நீடித்து வருவதால் அதிகாலையில் ஜில்லென்ற நிலையே இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே காணப்பட்டு வருவதால், அவ்வப்போது பெய்து வந்த மழையும் இப்போது பெய்யவில்லை.

இதனால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் அதிகாலை முதல் காலை 8 மணி வரை பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இந்த பனி மூட்டம் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பனியின் தாக்கம் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பகல் நேரங்களில் முன்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் காணப்படும். இனி வரும் நாட்களில் இரவு நேரங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டமும், பகலில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. சென்னை, கடலூர், தர்மபுரி, மதுரை, நாகை, சேலம், திருப்பத்தூர், திருச்சி, திருவள்ளூர், கோவை, வேலூர், ஈரோடு, நாமக்கள் மாவட்டங்களில் குறைந்த பட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. சேலம் மற்றும் திண்டுக்கல்லில் இயல்பை விட வெப்பநிலை குறைந்துள்ளது.  வரும் 23ம்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும், அதிகாலையில் கடலோரம் அல்லாத உள்மாவட்டங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். சென்னையில் காலையில் பனி மூட்டம் இருக்கும். பகலில் வறண்ட வானிலை காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: