சென்னை: சென்னை கேனைன் கிளப் சார்பில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் வளர்ப்புநாயை கையாள்பவர் வெற்றி கோப்பையை தட்டி சென்றார். சென்னை அருகே பல்லாவரத்தில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா,மஹாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து அழைத்துவரப்பட்ட வெளிநாட்டு மற்றும் இந்தியன் நாய் இனங்கள் என 275 நாய்கள் பங்கேற்றன.
