கே.கே.நகர், அசோக் நகர், மாம்பலம் பகுதிகளில் 10 பேரிடம் செல்போன் பறித்த கொள்ளையர்கள் பிடிபட்டனர்: செல்போன்கள், பைக் பறிமுதல்

சென்னை: சென்னையில் கே.கே.நகர், அசோக்நகர், மாம்பலம் பகுதிகளில் அடுத்தடுத்த நாட்களில் பெண் உட்பட 10 பேரிடம் செல்போன் பறித்து சென்ற வழக்கில், தலைமறைவாக இருந்து வந்த பிரபல வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செயத்னர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அசோக்நகர் அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (28). விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை ெசய்து வருகிறார். இவர், கடந்த 13ம் தேதி இரவு பணி தொடர்பாக ராஜா மன்னார் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர், முகவரி கேட்பது போல் நடித்து அவர் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிவிட்டனர். சிறிது தொலைவில் கே.கே.நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி, மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ரேகா (30) என்பவரிடம் அதே நபர்கள் செல்போன் பறித்து ெசன்றனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாஸ்து நிபுணர் ராமலிங்க சாஸ்திரி (56), தனது வாடிக்கையாளர் ஒருவரை பார்த்துவிட்டு பேருந்துக்காக சாலிகிராமம் 80 அடி சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே நபர்கள், அவரிடமும் செல்போன் பறித்து சென்றனர். தாம்பரம் பகுதியை சேர்ந்த நந்தினி (26), மேற்கு மாம்பலத்தில் லேப் டெக்னீஷியனாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 13ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்ல மாம்பலம் மகாதேவன் தெரு வழியாக தி.நகர் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்ற போது, அவரிடம் இருந்தும் அதே நபர்கள், செல்போனை பறித்து சென்றனர். இதுபோல் அடுத்த நாட்களிலும் பெண்கள் உட்பட 10 பேரிடம் அதே நபர்கள் செல்போன் பறித்து சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட அனைவரும் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். அதன்படி தனிப்படை போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்திய போது, அனைத்து இடங்களிலும் வழிப்பறி செய்தது ஒரே நபர்கள் தான் என்று  தெரியவந்தது.

அதைதொடர்ந்து பைக் பதிவு எண் மற்றும் செல்போன் சிக்னல் உதவியுடன் விசாரணை நடத்திய போது, பிரபல வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு கொள்ளையர்களான எம்.கே.பி.நகரை சேர்ந்த அஜய் (24), சபியுல்லா (23) என ெதரியந்தது. இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு நேற்று முன்தினம் 2 வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: