ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: பெங்கால் அணியை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சவுராஷ்டிரா அணி

கொல்கத்தா: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்கால் அணியை வீழ்த்தி சவுராஷ்டிரா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஏற்கெனவே 2019ல் ரஞ்சிக் கோப்பையை சவுராஷ்டிரா வென்ற நிலையில் 2ஆவது முறையாக வென்று அசத்தியுள்ளது.

பெங்கால் - சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 174 ரன்கள் எடுத்தது.

இதை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 404 ரன்கள் எடுத்தது. பெங்கால் அணி தரப்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை விழுத்தினர்,

பின்னர் 230 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

சவுராஷ்டிரா அணி தரப்பில் அதிகபட்சமாக உனட்கட் 6 விக்கெட்டுகளை  வீழ்த்தி அசத்தினார். இதை அடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி 14 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2வது முறையாகரஞ்சி கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை வென்றது.

Related Stories: