டாக்டர் சி.நடேசனாரின்86வது நினைவு நாள்: திமுக சார்பில் மரியாதை

சென்னை: நீதிக் கட்சி தோற்றுவித்தவர்களில் ஒருவரான டாக்டர் சி.நடேசனாரின் 86வது நினைவு நாளினையொட்டி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாட்டில் சமூகநீதியை வித்திட்ட காரணகர்த்தாக்களில் ஒருவரான டாக்டர் சி.நடேசனார், ‘திராவிடர் இல்லம்’ என்கிற மாணவர்களுக்கான விடுதியையும் நடேசனார் நடத்தினார்.

திராவிட சமூக மாணவர்களின் பிற்போக்கான நிலையை கண்டு வருந்திய அவர் இவ்விடுதியை தொடங்கினார். அங்கே ஏழை மாணவர்கள் பணம் செலுத்தாமலேயே உணவருந்தினர். சென்னை, தியாராயர் நகர், நடேசன் பூங்காவில் உள்ள டாக்டர் சி.நடேசனாரின் உருவ சிலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Stories: