ஒரே நாடு, ஒரே வரி என்பது போன்ற ஸ்லோகன்களை வைத்து அரசியல் செய்வது சுலபம், அதை செயல்படுத்துவது கடினம்.! டெல்லியில் தமிழ்நாடு நிதியமைச்சர் பேட்டி

டெல்லி: மாநிலங்களின் உரிமை காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை இருந்தால்தான், ஒரே நாடு ஒரே வரி திட்டம் சாத்தியமாகும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பின், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநில அளவில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என 13 மாநிலங்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது.

தேசிய அளவில் மட்டும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநில அளவிலான மேல்முறையீட்டு தீர்ப்பாயம் முக்கியமான ஒன்று, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை விடுவிப்பது குறித்து ஒப்புதல் முழுமையாக வழங்கப்படவில்லை. தணிக்கை அறிக்கை அடிப்படையில் 2020-21ம் ஆண்டுக்கான ரூ. 4,230 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவிக்க கூட்டத்தில் வலியுறுத்தினேன்.  ஒரே நாடு, ஒரே வரி என்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஒரே நாடு, ஒரே சட்டம் என்றிருக்கும் போது ஏன் இத்தனை நீதிமன்றங்கள்?. ஒரே நாடு, ஒரே வரி என்பது போன்ற ஸ்லோகன்களை வைத்து அரசியல் செய்வது சுலபம். ஆனால், அதை செயல்படுத்துவது கடினம்” என்றார்.

Related Stories: