விமான நிலைய ஊழியர்கள் ஸ்டிரைக் ஜெர்மனியில் விமான சேவை முடக்கம்

பெர்லின்: ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் விமான சேவை முடங்கியது. ஜெர்மனியில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் பணிபுரியும் பொதுத்துறை ஊழியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி நேற்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் 2,300 விமான சேவைகள்  ரத்து செய்யப்பட்டுள்ளன. மிகப்பெரிய விமான நிலையங்களான பிராங்க்பர்ட், முனிச்,ஹாம்பர்க் உள்ளிட்ட 7 முக்கிய விமான நிலையங்களில் 3 லட்சம் விமான பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜெர்மனி வழியாக செல்லும் வெளிநாட்டு பயணிகளும் அவதிக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து, தொழிற்சங்க தலைவர் கிறிஸ்டின் பெஹ்ல் கூறுகையில்,‘‘உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது. இதன் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்கு, ஊழியர்களுக்கு 10.5 சதவீத ஊதிய உயர்வு தரக்கோரி போராட்டம் நடக்கிறது.

Related Stories: