சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பாண்டி பஜார் போக்குவரத்து காவல் நிலையத்திற்குட்ட தியாகராய சாலையில் ‘ஹாப்பி ஸ்ட்ரீட்’ என்ற நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை வரும் 19, 26, 5, 12, 19 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. இதனால் தியாகராயா சாலையில் மேற்கண்ட நாட்களில் மட்டும் போக்குரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
* பிரகாசம் சாலை வழியாக தியாகராயா சாலை நோக்கி செல்லும் வானங்கள் ஜி.என்.செட்டி சாலை-வாணி மஹால் - நாயர் ரோடு- ம.பொ.சி சந்திப்பு வழியாக எல்டாம்ஸ் ரோடு மற்றும் அண்ணா சாலை சென்று இலக்கை அடையலாம்.