இந்தோனேசியா: இந்தோனேசியாவின் தனிம்பார் தீவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானதாக புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகுவில் உள்ள தனிம்பார் தீவில் பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.07 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 39 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் நேரிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் கடந்த 10ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது.
