பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வரவேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பில் விக்கிரமராஜா பேட்டி

கரூர்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் மண்டல கூட்டம் கரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், நகராட்சி மற்றும் அறநிலையத்துறை கடைகளுக்கான அதிகப்படியான வாடகை விதிப்பு, முன் தேதியிட்டு வாடகை வசூலிப்பு போன்றவற்றை வரைமுறைப்படுத்தி நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும்.

 வணிக கடைகளுக்கான சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பதையும், மின் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்றும் கூறினார். இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்  வலியுறுத்தினார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். ஈரோட்டில் மே 5ம் தேதி வணிகர் உரிமை முழக்க மாநாடு நடைபெறும் என்றும் இந்த மாநாட்டில் 20,000 வணிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்பார்கள் என்றும் விக்கிரமராஜா கூறினார்.

Related Stories: