சேலம்: சேலம் மாவட்ட மேட்டூர் அருகே மான் வேட்டைக்கு சென்றவர் கார்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகி விட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேட்டூர் அருகே மலையோர கிராமங்களில் வசிப்பவர்கள் பரிசலில் பாலாற்றை கடந்து சென்று கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டையாடுவது வழக்கம். இரு தினங்களுக்கு முன் 2 பரிசல்களில் சென்றவர்கள் பாலாற்றின் கரையில் இருந்தபடியே வேட்டையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் எல்லோரும் அருகில் உள்ள கிராமங்களுக்கு தப்பி சென்றனர்.
