வீட்டு வசதியை வலுப்படுத்த 190 மில்லியன் டாலர் உலக வங்கி நிதிக்கு அனுமதி: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

 நகர்புற வீட்டு வீட்டு வசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டிற்கு உலக வங்கியின் நிதி உதவியை கோரி தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநர் சார்பில் முன்மொழிவு சமர்பிக்கப்பட்டது. இந்த திட்டதின் மொத்த செலவான ரூ.4647.5 கோடியில் ரூ.3347.5 கோடி உலக வங்கியிடம் கடனாக கோரப்பட்டது. இந்த திட்டத்தை 2 கட்டங்களாக செயல்படுத்த உலக வங்கி ஒப்புதல் அளித்தது.

புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு சர்வதேச வங்கியிலிருந்து 50 மில்லியன் டாலர் முதலீட்டு நிதியாகவும், 450 மில்லியன் டாலர் வளர்ச்சி கடனாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக 200 மில்லியன் டாலர் விடுவிக்கப்பட்டது.2021-22ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது 2ம் கட்ட வீட்டுவசதி வலுப்படுத்தும் திட்டம் உலக வங்கி நிதி பங்களிப்புடன் செயல்படுத்தபடும் என அறிவிக்கப்பட்டது. இந்த 2ம் கட்ட திட்டத்திற்கு உலக வங்கியிடம் 190 டாலர் வளர்ச்சி கொள்கை கடனாக பெற ஒன்றிய அரசு, உலக வங்கி மற்றும் தமிழக அரசு இடையே ஒப்பந்தம் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி கையெழுத்தானது.

இந்த வளர்ச்சி கொள்கை நிதி எளிய முறையில் வீட்டு வசதியை பெற வழிவகை செய்ய கொள்கைகளை வலுப்படுத்தவும் போன்ற கருத்துகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அரசு இது குறித்து கவனமாக ஆய்வு செய்த பின் 190 மில்லியன் டாலர் உலக வங்கி நிதியை திட்டத்தில் பயன்படுத்த நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: