ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு 25ம் தேதி குரூப் 2, 2ஏ பதவிக்கு மெயின் தேர்வு

சென்னை:  குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளில் மொத்தம் 5 ஆயிரத்து 529 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி அறிவித்தது. இத்தேர்வுக்கு  11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடந்தது. தொடர்ந்து முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் நவம்பர் 10ம் தேதி வெளியிடப்பட்டது.

இதில் 57,641 பேர் மெயின் தேர்வு எழுத தகுதி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு வருகிற 25ம் தேதி நடைபெற உள்ளது. மெயின் தேர்வில் கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள்(10ம் வகுப்பு தரம்) 100 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு(பட்டப்படிப்பு தரம்) 300 மதிப்பெண்ணுக்கும் கேட்கப்படும். நேர்முகத்தேர்வு உள்ள பணிகளுக்கு நேர்முகத்தேர்வு 40 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இந்த நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு:

விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளமான(www.tnpsc.gov.in, www.tnpscexams.in) பதிவேற்றம்(டவுன்லோடு) செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Related Stories: