தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த மேலும் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த மேலும் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பி.பார்த்திபனை நியமித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆணையிட்டுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு தலைவர், துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் என 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மார்ச் 26ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற  நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி கவுன்சில் உறுப்பினர்களான கமல்குமார், சீனிவாசன் உள்ளிட்ட 8 தயாரிப்பாளர்கள் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் தற்போது பி.பார்த்திபனை நியமித்து  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: