தொடர்ந்து 4வது நாளாக குறைந்த தங்கம் விலை; சென்னையில் சவரன் ரூ.42,240 க்கு விற்பனை: நகை பிரியர்கள் ஹேப்பி.!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,240 க்கு விற்பனையாகிறது. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.

ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனிடையே 2023-2024ம் நிதியாண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த தினம் முதல் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. ஒன்றிய பட்ஜெட்டில் இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பு எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு கண்டிருக்கிறது. கடந்த தினங்களில் தங்கம் விலை ஏற்றம் கண்ட நிலையில் கடந்த திங்கள்கிழமை முதல் தங்கம் விலை குறைந்து வருகிறது.

அதன் அடிப்படையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,280க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.71.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சராசரி மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Related Stories: