அம்பத்தூரில் சொத்துவரி செலுத்தாத நிறுவனத்திற்கு சீல்: வருவாய் துறையினர் நடவடிக்கை

அம்பத்தூர்: அம்பத்தூரில் சொத்துவரி செலுத்தாத தனியார் நிறுவனத்திற்கு வருவாய் துறையினர் சீல்வைத்து நடவடிக்கை எடுத்தனர். சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7வது மண்டலத்திற்கு உட்பட்ட  பட்டரைவாக்கம் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக  சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய  ரூ.13 லட்சம் சொத்து வரிபாக்கி வைத்து முறையாக செலுத்தாமல், 600க்கும் மேற்பட்ட தொழிலாளளர்களுடன் அம்பத்தூர் பட்டரைவாக்கத்தில் செயல்பட்டு வந்த ஏ.ஐ.என்டர்பிரைசஸ் என்ற கார்மெண்ட்ஸ்  எக்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு, சென்னை மத்திய வட்டார அலுவலக உதவி வருவாய் அலுவலர் ரவிசந்திரன் தலைமையில், உதவி வருவாய் அலுவலர் பாலச்சந்தர் முன்னிலையில், மண்டல வருவாய் பிரிவு ஆய்வாளர்கள் ரமேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் நேற்று சீல் வைத்தனர். மேலும் அம்பத்தூர் பகுதியில் 130க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ரூ.2 கோடி வரை சொத்து வரியை செலுத்தாமல் நிலுவையில் உள்ளதாக மண்டல வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்று முறையாக சொத்து வரியை செலுத்தாத தொழிற்சாலைகளுக்கு  நோட்டீஸ் வழங்கி அடுத்தடுத்து சீல் வைக்கும் பணிகளிலும் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: