சுங்குவார்சத்திரத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை சேதப்படுத்திய இன்ஸ்பெக்டர்: வீடியோ வைரல்

சென்னை: சுங்குவார்சத்திரம் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அடித்து சேதப்படுத்திய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியில் துணிக்கடை, உணவகங்கள், மளிகை கடைகள், பேக்கரி மற்றும் காய்கறி கடைகள் என ஏராளமான கடைகள் உள்ளன. இதில், பெரும்பாலான கடைகள் சுங்குவார்சத்திரம் - திருவள்ளூர் சாலையின் நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.

இதனால், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சாலையோர கடைகள் இடையூறாக இருப்பதாக குற்றம் சாட்டினர். இதனால், சுங்குவார்சத்திரம் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், சாலையில் உள்ள கடைகளை  அடித்து துவம்சம் செய்து, கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கினை ஆலேக்காக தூக்கி வீசினார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். மேலும், கடையில் பொறுத்தபட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அச்சிறுத்தும் வகையில், கடை உரிமையாளர்களை மிரட்டி, கடைகளை உடைத்து, பைக்கினை சேதப்படுத்திய சுங்குவார்சத்திரம் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Related Stories: