குன்னூரில் மருத்துவ குணம் வாய்ந்த அத்திப்பழ சீசன் துவக்கம்: கிலோ ரூ.160 வரை விற்பனை

குன்னூர்: குன்னூரில் மருத்துவ குணம் வாய்ந்த அத்திப்பழம் சீசன் துவங்கியுள்ளது. இதன் விலை கிலோ ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மருத்துவ குணம் வாய்ந்த பழங்கள் காய்க்கின்றன. இதில், பேரி, பீச், பிளம்ஸ், மங்குஸ்தான், ஸ்ட்ராபெர்ரி, பேசன்புரூட், துரியன் உள்ளிட்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டு பழங்கள் ஏராளமாக உள்ளன.

இவற்றின் வரிசையில், அத்திப்பழம் மரங்கள் குன்னூரில் சில இடங்களில் மட்டுமே உள்ளன. குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதை சாலையில் காணப்படும் இந்த மரங்களில் தற்போது பழங்கள் கொத்துக்கொத்தாக காய்த்து அதிகளவில் காணப்படுகின்றன. குன்னூர் காந்திபுரம் உட்பட பல பகுதிகளில் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.  மருத்துவ குணம் வாய்ந்த அத்திப்பழத்தை சுற்றுலா பயணிகள் வாங்கி செல்கின்றனர்.

கிலோ ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழம் அதிக நார்சத்து கொண்டது. குறைந்த ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. அதிக மன அழுத்தம், கொழுப்பு சக்திகளை குறைக்கிறது.

Related Stories: