2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி போட்டி

வாஷிங்டன்: அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய-அமெரிக்கர் விவேக் ராமசாமி போட்டியிட உள்ளார். அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகிறார். இதுபற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, தேர்தல் பிரசாரத்தையும் டிரம்ப் தொடங்கி விட்டார்.

 இந்நிலையில், குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக செய்திகள் வௌியாகியுள்ளன. 37 வயதான விவேக் ராமசாமி ஒரு தொழிலதிபர். விவேக்கின் தந்தை எலக்ட்ரிக் இன்ஜினியர், தாயார் மனநல மருத்துவர். இவர்கள் இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள்.

Related Stories: